உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றி வருகின்ற சீனா

பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மகளிர் உச்சி மாநாடுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் அக்டோபர்
13ஆம் நாள் கூறுகையில், 5

கண்டங்களின் 110க்கும் மேலான நாடுகள்,
பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட சீன மற்றும்
வெளிநாட்டு விருந்தினர்கள் பெய்ஜிங்கில் ஒன்றுக்கூடி,
ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான
மேம்பாட்டிற்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை
என்ற கருப்பொருளில் விவாதம் நடத்தினர்
என்றார். மேலும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரையை பல்வேறு
தரப்பினர்கள் வெகுவாக பாராட்டினர். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த 4
முன்மொழிவுகள், உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு சீனத்
திட்டத்தை வழங்கியுள்ளன என்றும், உலக மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்கு
ஆதரவளிப்பதற்காக அவர் முன்வைத்த சீனாவின் 5 பயனுள்ள நடவடிக்கைகள், புதிய யுகத்தில்
சீனாவின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளன என்றும் பல்வேறு தரப்பினர்கள்
பாராட்டு தெரிவித்தனர் என்றும் லின்ஜியான் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author