உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநருன் சீன வணிக அமைச்சரின் உரையாடல்

உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் ஜெனரல் என்கோசி ஒகோன்ஜோ-இவேலாவுடன், சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வென்டொவ் ஏப்ரல் 11ஆம் நாள் காணொலி மூலம் உரையாடினார்.

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு, பலதரப்புவாத வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காத்தல், உலக வர்த்தக அமைப்பின் பங்களித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்தனர்.

வாங் வென்டொவ் அப்போது கூறுகையில், அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு, வளரும் நாடுகளுக்கு, குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.  மனிதாபிமான நெருக்கடியை கூட இது தூண்டலாம் என்று தெரிவித்தார்.

மேலும், சீனா உறுதியாக மேற்கொண்டுள்ள எதிர் நடவடிக்கைகள், தனது சொந்த நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பேணிக்காப்பது மட்டுமல்லாமல், சர்வதேச சமூகத்தில் நியாயத்தையும் நீதியையும் நிலைநிறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author