சூறாவளி சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஜமைக்காவுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 3ஆம் நாள் ஆறுதல் தெரிவித்தார்.
அந்நாட்டு தலைமை ஆளுநர் ஆலனுக்கு ஷிச்சின்பிங் அனுப்பிய ஆறுதல் செய்தியில்,
சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், சூறாவளி சீற்றத்தால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தோர் மற்றும் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கின்றேன்.
அந்நாட்டின் மக்கள் வெகுவிரைவில் சீற்றத்தைச் சமாளித்து, இன்னல்களில் இருந்து மீட்டு, தாயகத்தை மீண்டும் கட்டியமைக்கும் பணியில், ஜமைக்காவுக்கு உதவி செய்ய சீனா விரும்புவதாக என்றார்.
