சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஏப்ரல் 14ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
சீனச் சுங்கத் துறை தலைமை பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சரக்கு வரத்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 10 லட்சத்து 30 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.3 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.
மேலும், முதலாவது காலாண்டில், சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு வரலாற்றின் அதே காலத்தில் உச்ச நிலையை எட்டி, தொடர்ந்து கடந்த 8 காலாண்டுகளாக 10 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
தவிரவும், முதலாவது காலாண்டில், சீனாவில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 5 லட்சத்து 85 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.