சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி வெளியிட்ட செய்தியின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், வெளிநாட்டு வர்த்தகத் துறையின் கடன் தொகை 61 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது, இவ்வங்கியானது வெளிநாட்டு நிறுவனங்களுக்கான ஆதரவினைத் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காட்டுகின்றது.
இதில் சிறு மற்றும் குறு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட கடன் தொகை 1700 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டை விட, 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், இவ்வங்கியானது வெளிநாட்டு வர்த்தகத் துறையின் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் நிதானமாகவும் சீராகவும் வளர்ந்து வருவதற்கு ஆதரவளித்து வருவதோடு, வெளிநாட்டு வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்கான நாணய உயிர் ஆற்றலையும் விநியோகித்து வருகின்றது.