சீனாவின் அழைப்பின் பேரில், பாலஸ்தீனத்தின் ஃபத்தாஹா, ஹமாஸ் ஆகிய இரண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் பெய்ஜிங்கிற்கு வருகைபுரிந்து கலந்தாய்வு மேற்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ஜியென் ஏப்ரல் 30ஆம் நாள் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தின் நல்லிணக்கம் கொண்டு வருவது பற்றி, அவர்கள் நேர்மையாகவும் ஆழமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கலந்தாய்வு மூலம் நல்லிணக்கத்தை நனவாக்கும் அரசியல் ஆர்வத்தை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர்.
பாலஸ்தீனம் உள் ஒற்றுமையை வலுப்படுத்துவை முன்னேற்றுவிக்க சீனா மேற்கொண்ட முயற்சிக்கு இருதரப்பும் நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலப் பேச்சுவார்த்தை குறித்தும் ஒத்த கருத்து எட்டப்பட்டது என்று லின்சியென் கூறினார்.