காலநிலை மற்றும் நியாயமான மாற்றம் பற்றிய தலைவர்களின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 23ஆம் நாள் காணொலி வழியாக உரை நிகழ்த்தினார்.
தன்னுடைய உரையில் அவர் கூறுகையில், இவ்வாண்டு, பாரிஸ் ஒப்பந்தம் எட்டப்பட்ட 10வது ஆண்டு நிறைவாகும். பல்வேறு நாடுகள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டால், இன்னல்களைச் சமாளித்து, உலக காலநிலை மேலாண்மையை முன்னேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் ஷிச்சின்பிங் தன்னுடைய உரையில் பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்பது, சர்வதேச ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது, நியாயமான மாற்றத்தை முன்னேற்றுவது, பயனுள்ள செயல்பாடுகளை வலுப்படுத்துவது ஆகிய நான்கு முன்மொழிவுகளை முன்வைத்தார்.
மேலும், உலக பசுமை வளர்ச்சிக்குச் சீனா உறுதியான ஆதரவையளித்து, முக்கியப் பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சீனா பல்வேறு தரப்புகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தூய்மையான, அழகான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியுடைய உலகத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.