சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Estimated read time 0 min read

விடுமுறை தினத்தையொட்டி சேலம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகள், அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் குகைக் கோயில், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டனர்.

பூங்காக்களில் விளையாடி பொழுதைக் கழித்த குழந்தைகள், ஏற்காடு ஏரியில் பெற்றோருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

You May Also Like

More From Author