சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு, ரஷியாவின் மாஸ்கோ நகரில் துவங்கியது.
இது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹேய்சியுங் கூறுகையில்,
சீனாவும் ரஷியாவும் அசைக்க முடியாத அண்டை நாடுகளாகும். கூட்டு வளர்ச்சியடையும் உண்மையான நண்பர்களாகும் என்று இவ்வாண்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் பூத்தினுடன் இரு முறைகளாக நெடுநோக்கு தொடர்பு கொண்ட போது தெரிவித்தார். இவ்வாண்டு சீன-ரஷிய பண்பாட்டு ஆண்டாகும்.
சீன ஊடகக் குழுமம், ரஷிய செய்தி ஊடகங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்தி, இரு நாட்டு மனித நாகரிக தொடர்புகளை நெருக்கமாக்கி, இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கை இதுவே ஆகும் என்றார்.