உலகிற்கு வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சீனாவின் உயர்தர வளர்ச்சி

சீன அரசவையைச் சேர்ந்த வளர்ச்சி ஆய்வு மையம் செப்டம்பர் 30ஆம் நாள் முற்பகல் வெளியிட்ட சீன வளர்ச்சிக்கான 2026ஆம் ஆண்டின் அறிக்கையில், சீன பாணியுடைய நவீனமயமாக்க கட்டுமானத்தில் பெறப்பட்டுள்ள புதிய சாதனைகள் தொகுத்தப்பட்டதோடு, உலக வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சீனாவின் பங்குகள் பற்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் 30ஆம் நாள் கூறுகையில், சீனாவின் உயர்தர வளர்ச்சி உலகிற்கும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், உலகின் முன்னணி 100 புத்தாக்க மையங்களில் 25ஐ சீனா கொண்டுள்ளது. சீனாவின் அறிவியல் புத்தாக்கங்கள் மூலம், மேலும் அதிகமான நாடுகளுக்கு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளைக் நியாயமான விலையில் கிடைக்கிறது. அதே வேளையில், பல்வேறு நாடுகளுக்கு இடையே “டிஜிட்டல் கட்டமைப்பை” (digital ladders) வழங்குகிறது. சீனாவின் பசுமை வளர்ச்சி முறையின் மாற்றம், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு முக்கியப் பங்காற்ற உதவுகிறது. சீன சர்வதேச விநியோகச் சங்கிலி கண்காட்சி, சீன சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி, உலகளாவிய டிஜிட்டல் வர்த்தகக் கண்காட்சி மற்றும் சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி ஆகியவற்றை நடத்துவதன் மூலம் சீனா தனது உயர்தரமான வெளிநாட்டு திறப்பு கொள்கையை முன்னெடுத்து, உலக நாடுகளுக்குப் பரந்த சந்தை வாய்ப்புகளையும் முதலீட்டுச் சூழலையும் வழங்குகிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author