‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைப்பு  

Estimated read time 1 min read

கமல்ஹாசன்- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்தது.
தற்போது இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிகழ்வு இப்போது ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
“கலை காத்திருக்க முடியும். இந்தியா முதலில் வருகிறது ” என்ற தலைப்பிலான அறிக்கையில், தற்போதைய அதிகரித்த எச்சரிக்கை நிலையை காரணம் காட்டி, இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author