ஹாங்காங்கின் முதலாவது ஐந்தாண்டு திட்டம் வெளியீடு

Estimated read time 1 min read

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஹாங்காங்கின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை(2026-2030) 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இத்திட்டம் குறித்து ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லி ஜியாச்சௌ கூறுகையில், பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனைகளைப் பெறுதல், சர்வதேச போட்டியாற்றல் மற்றும் செல்வாக்கைத் தொடர்ந்து உயர்த்துதல், ஹாங்காங்கின் வடக்கு நகரப் பகுதி கட்டுமானத்தை விரைவுபடுத்துதல், மக்களின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துதல், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்தில் இணைந்து இதில் முக்கிய பங்காற்றுதல் ஆகிய 5 இலக்குகள் இதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றார்.  

You May Also Like

More From Author