சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியுடன் செப்டம்பர் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், தற்போது மத்திய கிழக்கு பகுதியில் கொந்தளிப்பான நிலைமை, சர்வதேச அமைதி மற்றும் வளர்ச்சியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர அங்க நாடான சீனா, சர்வதேச சர்ச்சையைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்ற விரும்புகிறது என்றும், சீனாவும் ஈரானும் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகும். ஈரானுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, ஈரானின் உரிய உரிமையைப் பேணிக்காக்க சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார். மேலும், பல்வேறு தரப்புகள் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்தை வெகுவிரைவில் மீண்டும் திறந்து, சர்வதேச நீர் போக்குவரத்தின் பாதுகாப்பையும், சர்வதேச எரியாற்றல் போக்குவரத்து மற்றும் தொழில் சங்கிலியின் நிலைத்தன்மையையும் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், ஈரானின் மீதான சீனக் கொள்கைகள் தொடர்ச்சியாகவும் நிதானமாகவும் உள்ளன. ஈரானுடன் தொடர்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவு புதிய முன்னேற்றத்தைப் பெற ஊக்குவிக்க சீனா விரும்புவதாகவும் வாங்யீ தெரிவித்தார்.
அப்பாஸ் அராக்ச்சி கூறுகையில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த மத்திய கிழக்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கான 4 முன்மொழிவுகளுக்கும், பிரதேசப் பொது பாதுகாப்பை முன்னேற்றுவதற்கான 4 முன்மொழிவுகளுக்கும் ஈரான் ஆதரவளிக்கிறது. இக்கட்டுக்கோப்புக்குள் சீனாவுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார். மேலும், சீனாவுடன் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, பல்வேறு நிலைகளிலான தொடர்புகளை நெருக்கமாக்கி, சவால்களைக் கூட்டாகச் சமாளித்து, இரு நாட்டுறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்ற ஈரான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
