ஆசிய தொடர் விலகிய வருண் சக்கரவர்த்தி…. புதிதாக இணைந்த இளம் புயல்….!! 

Estimated read time 1 min read

ஜப்பானில் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, விலா தசையில் ஏற்பட்ட காயம் (Side Strain) காரணமாகத் தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார். வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஜப்பானில் ஆண்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியிருப்பது அணிக்குக் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளரான விப்ராஜ் நிகம் இந்திய அணியில் அதிரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) வருண் சக்ரவர்த்தி தீவிர சிகிச்சை பெறச் சென்றுள்ள நிலையில், விப்ராஜ் நிகமிற்கு இந்திய அணியில் விளையாடக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு அவரது கிரிக்கெட் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author