வங்கக்கடல் பகுதியில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கிழக்கு அரபிக்கடலில், கோவா மற்றும் தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அருகில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு
