மே திங்கள் 29ஆம் நாள் 1 மணி 31 நிமிடத்திற்கு, 2016எச்ஓ3 என்னும் சிறுகோளை ஆய்வு செய்யும் வகையில் டியன்வென்-2 ஆய்வுக்கலம் சீனாவின் சிசான் செயற்கை ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 18 நிமிடங்களுக்குப் பின், இந்த ஆய்வுக் கலம் பூமிக்கும் 2016எச்ஓ3 என்னும் சிறிய கோளுக்கும் இடையிலான இடமாற்று வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது.
2016எச்ஓ3 என்னும் சிறிய கோளில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவது டியன்வென்-2இன் முக்கியக் கடமையாகும்.