பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை

Estimated read time 0 min read

பிரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் 15 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் ‘ஒருங்கிணைந்த மானுட தர்மம்’ குறித்த நினைவு கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விழாவில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவின் பிரம்மபுத்ரா, ரஷியாவின் மாஸ்குவாவில் இருந்து பிரமோஸ் என்ற பெயர் ஏவுகணைக்கு வைக்கப்பட்டதாக தெரிவித்தார். பிரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு 85 சதவீதமாகவும், இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதமாகவும் இருந்ததாக குறிப்பிட்ட அண்ணாமலை, இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author