சசிகுமார் ‘ஃப்ரீடம்’ பட டீசர் ரிலீஸ்

Estimated read time 1 min read

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃபிரீடம்’. இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் ‘ஃபிரீடம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாகச் சிறையில் சிக்கிய இருவர் அங்கிருந்து தப்பிச் செல்வது போன்ற கதைக்களத்தில் திரைப்படம் அமைந்துள்ளது. வரும் ஜூன் 10-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author