போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவதே எதிர்காலத்திற்கான தலையாய சாதனையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், காஷ்மீர் நிரந்தர இணைப்பு, நக்சலிசம் ஒழிப்பு மற்றும் ஒரே நாடு, ஒரே வரி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
