மேஷம்
இராசி நாதன் செவ்வாய் சிம்மத்தில் கேதுவுடன் சூட்சும வலு பெற்றதால் ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படும் மற்றும் தெளிந்த சிந்தனையுடனும் தைரியத்துடனும் எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்., குழந்தைகளால் செலவுகள் ஏற்படலாம். கணவர் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான வாரம். புதிய கடன்கள் வாங்கும் முயற்சி நிறைவேரும். தன வரவு நன்றாக இருக்கும். வார இடையில் அலைச்சல் மன சஞ்சலம் மனக்கவலைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன, முயற்சிகளும் தாமதப்பட வாய்ப்புகள் உள்ளன. அனுகூலமான நாட்கள் -08,14
ரிஷபம் :
இராசி நாதன் சுக்கிரன் இராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால் 12ம் இடம் சுபத்துவமாகி வெளியூர் வெளிநாடு போன்ற ப்ரயாணங்கள் அமையும் வாய்ப்புக்கள் உள்ளன. தனாதிபதி புதன் இராசிக்கு 2ல் குருவுடன் இணைவதால் நினைத்த காரியங்கள் நிறைவேரும் நல்ல வாரம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூட வாய்ப்புக்கள் உள்ளன. தன வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல இலாபம் ஏற்படும். புதிய வண்டி வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவீர்கள்.. வார இறுதியில் மன குழப்பம் வீன் அலைச்சல் காரியத்தில் தடை தாமதம் ஏற்படலாம். அனுகூலமான நாட்கள் 8 முதல் 11 வரை
மிதுனம் :
இராசி நாதன் புதன் இராசியில் குருவுடன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவர் மனைவி உறவு மேம்படும் நல்ல வாரம். சிறு தூர பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படலாம். பூர்வீக சொத்து சம்மந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம். வார முதலில் எடுக்கும் புதிய முயற்சிகள் தாமதப்படலாம், வாரத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி, பெண்களால் ஆதரவு ஆதாயம் ஏற்படும் நல்ல வாரமாக இருக்கும். .அனுகூலமான நாட்கள் 10 முதல் 13 வரை.
கடகம் :
இராசி நாதன் சந்திரன் நீச்ச வீட்டிற்கு செல்ல இருந்தாலும் பெளர்ணமியை நோக்கி செல்ல இருப்பதால் வாரத்தின் முற்பகுதியில் சில சஞ்சலங்கள் இருந்தாலும் பிற்பகுதி சாதகமான வாரமாக அமைகிறது. இராசிக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய் கேதுவுடன் இணைவதால் குடும்பத்தில் கணவர் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது மகிழ்ச்சியைத் தரும்.. வாரத்தின் பிற் பகுதியில் வியாபாரத்தில் நல்ல இலாபம் ஏற்படும். இளைய சகோதரத்தால் நல்ல ஆதரவு இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பான வாரம். அனுகூலமான நாட்கள் 12,13,14.
சிம்மம் :
இராசி நாதன் சூரியன் 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் இலாபம் ஏற்படலாம், புதிய வியாபாரம் கிளைகள் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தனஸ்தானாதிபதி புதன் குருவுடன் இணைவதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி ஏற்படலாம் கணவர் மனைவி உறவு மேம்படும் நல்ல வாரமாக அமையும். , அரசு சம்பந்தமான வேலைகள் நிறைவேர சாதகமான வாரம். தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேரும். அனுகூலமான நாட்கள் 8,14
கன்னி :
இரசி நாதன் குருவுடன் மிதுனத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை ஏற்படும், எதையும் துடிப்புடன் செய்து முடிக்கும் நல்ல வாரம். புகழ் கெளரவம் வந்து சேரும் நல்ல வாரம். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். குடும்பத்தில் வார முதலில் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் நல்ல மேன்மை ஏற்படலாம். சிந்தனையில் நல்ல தெளிவு இருக்கும், கணவர் மனைவியடையே் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாரத்தின் பிற்பகுதியில் முயற்சிகள் தடை தாமதப்படலாம். பயணங்கள் மூலம் ஆதாயம் வரலாம். அனுகூலமான நாட்கள் 9,10 11.
துலாம் :
இராசி நாதன் 7ம் இடத்தில் சஞ்சரிப்பதால் கூட்டுத் தொழிலில் நல்ல மேன்மை ஏற்படும், நண்பர்களால் ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் நல்ல வாரமாக அமையும். தனாதிபதி செவ்வாய் சிம்ம இராசியில் சஞ்சரிப்பதால் பண வரவிற்கு ஏதுவாக இருக்கும். தொழிலில் நல்ல இலாபமும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு போன்றவை ஏற்படலாம். வாரத்தின் இடையில் பண விரையங்கள் ஏற்படலாம். அனுகூலமான நாட்கள் 8,12,13
விருச்சிகம் :
இராசி நாதன் செவ்வாய் தனது நட்பு வீடான சிம்மத்தில் சஞ்சிரப்பதால் சிந்தனையில் நல்ல தெளிவு கிடைக்கும், ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை இருக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறக் கூடிய நாட்கள் வர இருக்கின்றன. பண வரவு நன்றாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை விட நல்ல இலாபம் ஏற்படலாம்,, தன்னம்பிக்கை நிறைந்த வாரமாக அமையும்., வாரத்தின் முற்பகுதியில் செலவுகள் சற்று அதிகமாக காணப்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வார இறுதியில் பண வரவுகள் சீறாகும். அனுகூலமான நாட்கள் 9,10,11,14
தனுசு :
இராசி நாதன் குரு பகவான் இராசிக்கு 7 ம் இடத்தில் புதனுடன் சஞ்சரிப்பதால் கந்த ஒரு விஷயமும் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும், குல தெய்வ வழிபாடு செய்ய வாய்ப்புக்கள் உள்ளன. பழைய கடன்கள் அடைய வாய்ப்புக்கள் உள்ளது,.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வார ஆரம்பத்தில் நல்ல பண வரவு பின்பு செலவுகள் சற்று காணப்பட்டு வார இறுதியில் நல்ல பண வரவு ஏற்படும் சிறப்பான வாரமாக அமையும். அனுகூலமான நாட்கள் 8,12,13.
மகரம் :
இராசி நாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் பஞ்சமாதிபதி சுக்ரன் இராசிக்கு 4 ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு காரியத்தையும் தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பொருமோடும் நிதானத்தோடும் ஆலோசித்து பேசுவது நல்லது. ஜீவன விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வண்டி வாகனங்கள் சம்பந்தமான செலவுகள் இருக்கலாம், வண்டி வாரத்தின் முற்பகுதயில் தொழிலில் மேன்மை இலாபம் உத்தியோகத்தில் மேன்மையும் அடைவீர்கள். வார இறுதியில் பணச்செலவுகள் ஏற்படலாம். அனுகூலமான நாட்கள் 8,9,10,11,14.
கும்பம் :
இராசிக்கு 5ம் அதிபதி புதன் ஆட்சி வீட்டில் குருவுடன் இணைவது நல்ல சிறப்பான வாரமாக அமையும். எடுத்த காரியங்கள் தடையில்லாமல் வெற்றிகரமாக முடிப்பீர்கள். வார ஆரம்பம் சற்றே சாதகமாக இல்லையென்றாலும் பிற்பகுதி நல்ல அனுகூலமாக இருக்கிறது. பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்லுதல் நன்மையை பயக்கும். தொழில் உத்தியோகத்தில் இலாபமும் மேன்மையும் வாரத்தின் பிற்பகுதியில் ஏற்படும். அனுகூலமான நாட்கள் 9,10,11,12,13.
மீனம் :
இராசியில் சனி பகவான் சஞ்சரிப்பதால் மன கவலைகள் மன அழுத்தம் ஏற்பட்டாலும் பஞ்சமாதிபதி சந்திரன் பெளர்ணமியை நோக்கி செல்வதால் அனைத்திலும் மீண்டு அமைதி காண்பீர்கள். வார முதலில் சற்று மன சஞ்சலங்கள் அலைச்சல் போன்றவை இருந்தாலும் பிற்பகுதியில் அனுகூலமாக அமைகிறது. தன வரவு வாரத்தின் பிற்பகுதியில் ஏற்பட சாதகமாக உள்ளது. பாக்கியாதிபதி செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்கள் தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நிறைவேற சாதகமான வாரம். அனுகூலமான நாட்கள் 12,13,14.
சுபம் !!!
தென்னேட்டி சுப்பராமன் ஶ்ரீராம்
9566620842 / 9944443215
astromanibharathy@gmail.com