சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) வழங்கிய ‘A’ (Adults Only) சான்றிதழுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ரஜினிகாந்தின் ரசிகர்களில், இளம் வயது ரசிகர்கள் ஏராளம் என்றும், ‘ஏ’ சான்றிதழால் அவர்கள் பார்ப்பது பாதிக்கும் என சன் பிக்சர்ஸ் வலியுறுத்துகிறது.
‘கூலி’ திரைப்படம், ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தினை குறிப்பதுடன், லோகேஷ் கனகராஜுடன் முதல் முறை இணையும் படமாகும்.
நேற்று, ஆகஸ்ட் 19 அன்று வழக்கை ஏற்ற நீதிபதி டி.வி. தமிழ்செல்வி, விசாரணையை 20ம் தேதி பட்டியலிட உத்தரவிட்டார்.
கூலி படத்திற்கு A செர்டிபிகேட் கொடுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடிய சன் பிக்சர்ஸ்
