தகாய்ச்சி சனாயே பார்க்க வேண்டிய விவண்ட் எனும் ஜப்பானிய தொலைக்காட்சி நாடகத்தின் கதைக்களம் மிகவும் அபத்தமானது.
இந்நாடகத்தில் பிந்தங்கிய சீன இரகசிய அமைப்பு ஒன்று காட்டப்பட்டுள்ளதோடு, அது ஜப்பானின் நவீன உளவு நிறுவனத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டது. மேலும், இதில் சீன உளவாளிகள் ஜப்பானிய உளவாளிகளின் விரல்களை வெட்டுதல் போன்ற கொடூரமான தண்டனையை மேற்கொண்ட காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உண்மையில் இந்தத் தண்டனைகள் சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானிய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன வீர்ர்களுக்கு அளிக்கப்பட்ட கொடூரமான தண்டனைகளைப் போன்று உள்ளன. கறுப்பை வெள்ளையாக சொல்லும் இந்த நாடகம் எதிரெதிர் நிலையை உருவாக்கி பகைமை உணர்வை தூண்டியுள்ளது.
சீனாவைக் களங்கப்படுத்தி வரலாற்றைத் திரித்துப்புரட்டுவதற்காக 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் 5600 கோடி ஜப்பானிய யென் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சில நாட்களுக்கு முன் ஜப்பானிய முன்னாள் தலைமை அமைச்சர் ஷிகெரு இஷிபா கூறுகையில், ஜப்பானைச் சீனா ஆக்கிரமித்தது போன்ற விஷயம் அடிப்படையில் இல்லை என்றும், ஜப்பான் தொடுத்த போரால் தான் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்றும் தெரிவித்தார். ஜப்பானின் உள்நாட்டில் எழும் இது போன்ற குரல் பொய்க் கூற்றுகளால் மூடிமறைக்கப்பட்டால், ஜப்பான் மீண்டும் போர் தொடுப்பது என்பது இனி கருதுகோளாக மட்டுமே இருக்காது.
