சின்ஜியாங் தொடர்பான சட்டத்தின் கீழுள்ள நிறுவன பட்டியலில் சீன நிறுவனங்களை அமெரிக்கா சேர்ப்பதற்கு சீனா எதிர்ப்பு

கூறப்படும் உய்கூர் கட்டாய உழைப்பு எதிர்ப்புச் சட்டத்தின் கீழுள்ள நிறுவனப் பட்டியலில் சீன நிறுவனங்களை அமெரிக்கா சேர்த்துள்ளது குறித்து, சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

சீனாவில் கட்டாய உழைப்பு இல்லை. சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள அனைத்து இன மக்களும் வேலைவாய்ப்புகளை சமமாகவும் சுதந்திரமாகவும் பெறுகின்றனர் என்றும், தொழிலாளர்களின் உரிமை நலன்கள் சட்டத்திற்கு இணங்க பயனுள்ளதாக பாதுகாக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு உண்மை ஆதாரமும் இல்லை. மனித உரிமைகள் என்ற சாக்குப்போக்கில் ஒருதரப்பு பாதுகாப்புவாத மற்றும் கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகளை அது செயல்படுத்தியுள்ளது. இது குறித்து சீனா தீவிரமாக கண்டித்து, உறுதியாக எதிர்க்கிறது. தனது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் சீனா அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author