சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் 12ஆம் நாள், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாலோசனை அமைப்புமுறைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சீனா மற்றும் அமெரிக்காவுக்குமிடையில் ஒத்த கருத்துக்கள் எட்டப்பட்டுள்ளன. இந்த ஒத்தக் கருத்துகளை இரு தரப்பும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், அமெரிக்கா சீனாவுடன் இணைந்து, இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் விரும்புகின்றோம்.
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாலோசனை அமைப்புமுறையின் மூலம், தொடர்புகளை வலுப்படுத்தி, ஒத்த கருத்துக்களை விரிவாக்கி, தப்பெண்ணங்களைக் குறைத்து, ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றார்.