சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 3ஆம் நாள், வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ தாக்குதல் குறித்து செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.
அவர் கூறுகையில்,
அரசுரிமை வாய்ந்த ஒரு நாட்டின் மீது அமெரிக்கா வெளிப்படையாக ஆயுத ஆற்றலைப் பயன்படுத்தி, அந்நாட்டின் அரசுத் தலைவரைக் கைது செய்வது குறித்து சீனா அதிர்ச்சி மற்றும் கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கத் தரப்பின் இந்த ஆதிக்க செயல், சர்வதேச சட்டத்திற்குப் புறம்பானது. இச்செயல் வெனிசுலா அரசுரைமையை மீறி, இலத்தீன் அமெரிக்க–கரீபியன் பிரதேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலை அமைந்துள்ளது. இச்செயலுக்கு சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நாவின் சாசனத்தின் கோட்பாடு மற்றும் கொள்கையை அமெரிக்கா பின்பற்றி, வேறு நாடு அரசுரிமை பாதுகாப்பை ஊறுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்றார்.
