சோனியா காந்தி மக்களவையில் இனி போட்டியிட போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக அவரது மகளும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி மக்களவையில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானை சேர்ந்த ஒரு ராஜ்யசபா பதவிக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று பேசப்படுகிறது.
பிரியங்கா காந்தி வத்ரா மக்களவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை சரியில்லாத சோனியா காந்தி(77), வரும் ராஜ்யசபா தேர்தலில் ஜெய்ப்பூரில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
எனினும், மாநிலங்களவைக்கு மாறுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.