சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் அம்மையார் அண்மையில் அமெரிக்காவின் லின்கன் கல்விக்கூடத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசந்த விழாவுக்கான வாழ்த்து அட்டையை பதிலாக வழங்கினர்.
இக்கல்விக்கூடத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீனா மற்றும் அமெரிக்க மக்கள், குறிப்பாக இளைஞர்களுக்கிடையேயான நட்புறவை அதிகரிப்பதற்கு பங்காற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
பிப்ரவரி 12ஆம் நாள் லின்கன் கல்விக்கூடம் சீன ஊடக குழுமம் மூலம் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவிக்கு நன்றி தெரிவிப்பதோடு, சீனாவுக்கு வருகை புரிந்து பரிமாற்றம் மேற்கொள்வது மீது எதிர்பார்ப்பைக் கொள்வதாக தெரிவித்தது.
இக்கல்விக் கூடத்தின் வேந்தர் ஹோசேஸ் கூறுகையில், ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்து அட்டையைப் பெற்ற போது மிகவும் ஊக்கமடைந்ததாகவும், லின்கன் கல்விக்கூடம், சீன-அமெரிக்க பண்பாட்டுப் பரிமாற்றத்தின் பாலமாகவும் சங்கிலி தொடராகவும் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் பரிமாற்றம் செய்து கல்வி பயில 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்களை அழைக்க சீனா விரும்புவதாக கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சென்ட் ஃபிரான்சிஸ்கோ நகரில் அறிவித்தார்.
இத்திட்டத்தில் பங்கெடுக்கும் அமெரிக்காவின் முதலாவது தொகுதி பள்ளிகளில் லின்கன் கல்விக்கூடமும் ஒன்றாகும். முதலாவது தொகுதி ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் இவ்வாண்டு மார்ச் திங்கள் சீனாவின் பல நகரங்களுக்குச் சென்று, சீன ஊடக குழுமத்தைப் பார்வையிடுவார்கள்.