சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஜுலை 22ஆம் நாள் பெய்ஜிங்கில், அமெரிக்க-சீன வர்த்தகத்துக்கான அமெரிக்காவின் தேசிய கவுன்சிலின் இயக்குனர் குழு பிரதிநிதிகளைச் சந்தித்துரையாடினார்.
வாங்யீ கூறுகையில், சீனா எப்போதும் ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்தல், சமாதான சகவாழ்வு, வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகிய மூன்று கோட்பாடுகளின் கீழ் அமெரிக்காவுடனான உறவைக் கையாள்கின்றது. மேலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை வலுப்படுத்தவும், கருத்துவேறுபாடுகளைக் கட்டுப்படுத்தவும், ஒத்துழைப்பை விரிவாக்கவும், சீன-அமெரிக்க உறவை நிதானப்படுத்தவும் முன்னேறவும் சீனா பாடுபட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
அதேவேளையில், சீனா தனக்குரிய நலன்களை பாதுகாத்து, கோட்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அமெரிக்க தொழில் மற்றும் வணிகத் துறையினர்கள், சீனாவுடன் இணைந்து முன்னேறவும், சொந்த வளர்ச்சி அடைவதோடு, இரு நாட்டு உறவுக்கும் மக்களுக்கிடையேயான நட்புக்கும் புதிய பங்கு ஆற்ற வேண்டும் என்று வாங்யீ விருப்பம் தெரிவித்தார்.
அமெரிக்கப் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு வாங்யீ விவரமாக விளக்கம் அளித்தார்.