40ஆவது சீனா லாங்ஃபாங் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருட்காட்சியைச் சேர்ந்த சர்வதேச எல்லை கடந்த மின்னணு வணிக வளர்ச்சிக் கருத்தரங்கு ஜுன் 17ஆம் நாள் நடைபெற்றது.
இதில், சீனாவின் 2022ஆம் ஆண்டு எல்லை கடந்த மின்னணு வணிகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலைமை பற்றி சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிமுகம் செய்தார்.
சீனாவின் எல்லை கடந்த மின்னணு வணிகத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு முதன்முறையாக 2 லட்சம் கோடி யுவானைத் தாண்டி, 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானை எட்டியது.
இது, 2021ஆம் ஆண்டில் இருந்ததை விட 7.1 விழுக்காடு அதிகமாகும். எல்லை கடந்த மின்னணு வணிகம், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்துக்கு புதிய இயக்காற்றலை ஊட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.