தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான கல்வியாளர் வசந்த தேவி சென்னையில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவர் சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர். கும்பகோணம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதல்வராக பொறுப்பு வகித்தவர்.
அதன்பிறகு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பெறுப்பு வகித்தார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட முன்னேற்றங்களுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் வசந்த தேவி. இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.