தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குடமுழுக்கிற்கான பணிகளும் ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்செந்தூர்கோயில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ம் தேதி (திங்கள்கிழமை) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மற்றொரு நாள் வேலை நாளாக செயல்படும் என்றும், அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.