சூரிநெம் குடியரசின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிமன்ஸ் அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 11ம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அவர் கூறுகையில், கரீபிய பிரதேசத்தில் சீனாவின் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியாக சூரிநெம் திகழ்கிறது. இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 49ம் ஆண்டுகளில், கூட்டு முயற்சியுடன் சீன-சூரிநெம் உறவு சுமுகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு சாதனைகள் படைக்கப்பட்டதோடு, பலதரப்பு விவகாரங்களிலும் இரு தரப்புகள் நெருங்கிய ஒருங்கிணைப்பை நிலைநிறுத்தி வருகின்றன. சீன-சூரிநெம் உறவிற்கு முக்கியத்துவம் அளித்து, அரசுத் தலைவர் சிமன்ஸ் அம்மையாருடன் இணைந்து, நட்பார்ந்த ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பு உறவின் வளர்ச்சியை முன்னெடுத்து, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களை வழங்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.