ஏப்ரல் 29ஆம் நாள், அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியமைந்த 100ஆவது நாள் ஆகும். இதையொட்டி, அமெரிக்க ஊடகங்களால் அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி, நடப்பு அரசின் நிர்வாக செயல்திறன் மீது 55விழுக்காட்டினர் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
பெரிய அளவிலான பணிநீக்கம் செய்தல், குடியேறியவர்களுக்கு தீவிரமான கொள்கை மேற்கொள்தல், அறிவியல் தொழில் நுட்ப ஆய்வுக்கான கட்டணத்தைக் கணிசமாக குறைத்தல், பரஸ்பர வரி விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், அமெரிக்க மக்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சிஎன்என் செய்தி நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்து கணிப்பின்படி, 60விழுக்காட்டு அமெரிக்க மக்கள், அரசின் கொள்கைகள் தங்களது வாழ்வு கட்டணத்தை அதிகரிக்க செய்துள்ளதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் பலகலைக்கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க நுகர்வோரின் நம்பிக்கை குறியீடு தொடர்ந்து சரிவு அடைந்து, கடந்த மார்ச் மாதத்தை விட 8விழுக்காடு குறைந்து காணப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2025ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் அதிகரிப்பு வேகம், 1.8விழுக்காடாக குறைய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அந்தக் குறைவு விகிதம், வளர்ந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களில் மிக அதிகமாகஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 100 நாட்களில், உலகில் பல நாடுகள், அமெரிக்காவின் பரஸ்பர வரி வசூலித்தலுக்கு எதிர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. அண்மையில் பிரேசிலில் நிறைவடைந்த பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில், பலதரப்புவாதத்தில் ஊன்றி நிற்பது, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையைப் பேணிக்காப்பது, ஒருதரப்பு ஆதிக்கவெறியை எதிர்ப்பது ஆகிய முன்மொழிவுகள் வெளியிடப்பட்டன. தவிர, உலகின் பல நாடுகள், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேசையில் சண்டையிடத் தயாராகி வருகின்றன. அதே வேளையில், ஆபத்துகளை எதிர்த்து, பொருளாதாரத்தின் மீள்தன்மையை மேம்படுத்துவதற்கும் வகையில், வெளிநாட்டுக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் அவை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து, அமெரிக்காவின் ஹல்ட் சர்வதேச வணிகக் கல்லூரியின் பேராசிரியர் யாசர் ஜலால் கூறுகையில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதித்தல் என்ற காரணத்தால், வெளிப்புறத்துக்கான வளர்ந்து வரும் நாடுகள் சார்பளவு குறைந்துள்ளதோடு, தங்களது சொந்தமான புத்தாக்க ஆற்றலை உயர்த்த வேண்டியதன் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2027ஆம் ஆண்டு வரை உலக பொருளாதார வளர்ச்சியில் வளர்ந்து வரும் நாடுகள் 60விழுக்காட்டு பங்காற்ற வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.