சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், கம்போடிய மக்கள் கட்சியின் தலைவரும், செனெட் அவை தலைவருமான சம்தேக் ஹன் செனுடன் டிசம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கம்போடியாவுடன் இணைந்து, உயர் தரம், உயர் நிலை மற்றும் உயர் வரையறை கொண்ட சீன-கம்போடிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க சீனா விரும்புகிறது. முதலாவதாக, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, உறுதியான நட்புறவை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, பரிமாற்றம் மற்றும் பகிர்வை ஆழமாக்கி, வளர்ச்சியைக் கூட்டாக நாட வேண்டும். மூன்றாவதாக, ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கடைப்பிடித்து, கூட்டு வெற்றி பெறும் புதிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் கூறினார். மேலும், சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் கம்போடியா மேலும் பெரும் பங்காற்றுவதற்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
சம்தேக் ஹன் சென் கூறுகையில், கம்போடிய-சீனப் பொது எதிர்காலச் சமூகம், இரு தரப்புகளின் கூட்டு நலன்களுக்குப் பொருந்தியது. ஒரே சீனா என்ற கோட்பாட்டை கம்போடியா தொடர்ந்து உறுதியுடன் பின்பற்றி, மைய நலன்களைச் சீனா பேணிக்காப்பதற்கு ஆதரவளிக்க விரும்புவதாக தெரிவித்தார்.