டாடா மோட்டார்ஸ் அறிவித்த மெகா ஆஃபர்.. 3.80 லட்சம் தள்ளுபடி..!!

Estimated read time 1 min read

இந்தியாவின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான டாடா தங்களுடைய மின்சார கார்களுக்கு அதிகபட்சமாக 3.8 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்துடன் இந்த தள்ளுபடி முடியும் என தெரிவித்துள்ளது.

நெக்ஸான் (Nexon) : நெக்ஸான் மின்சார கார்களுக்கு அதிகபட்சமாக 1.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2024, 2025இல் தயாரிக்கபட்ட chassis model கார்களுக்கு அதிகபட்ச சலுகை கிடைக்கும். 2026ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட நெக்ஸான் மின்சார கார்களுக்கு 30,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டியாகோ (Tiago) : டியாகா மின்சார கார்களுக்கு டாடா நிறுவனம் 1.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. டாடாவின் மலிவு விலை மின்சார கார்களாக டியாகா மாடல் கார்கள் இருக்கின்றன. இதில் 2024 மற்றும் 2025இல் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும், 2026இல் தயாரிக்கப்பட்ட மாடல் கார்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹேரியர் (Harrier) : டாடாவின் விலைமதிப்பு மிக்க மின்சார கார் இது. இதில் 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அனைத்து மாடல்களுக்கும் 1.5 லட்சம் ரூபாய் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. இது தவிர லாயல்டி போனஸும் கிடைக்குமாம்.

பன்ச் (Punch) : டாடாவின் புகழ்பெற்ற மின்சார கார் இது. இதில் 2024,2025இல் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 1.6 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். 2026 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பன்ச் கார்களுக்கு 90,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்வ் (Curvv) : டாடா நிறுவனத்தில் அதிகமாக தள்ளுபடி பெற்ற மின்சார கார் இது தான். இந்த மாடல் கார்களுக்கு 3.8 லட்சம் ரூபாய் வரை அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 2024, 2025 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 3.3 லட்சம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. அதே போல 2026 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு 2.8 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியும். மற்ற அனைத்து வகையான கார்களுக்கும் 3.8 லட்சம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி கிடைக்கும் என டாடா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author