ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் : இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

Estimated read time 1 min read

வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான 27½ மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது.

வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில்இன்சாட் வகையிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (பிப்ரவரி 17) மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது

இதற்கான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று மதியம் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்கியது. எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author