இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்ட நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று வெளியிடுவார் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
இன்று காலை 10.45 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு (விஎஸ்எஸ்சி) தனது வருகையின் போது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இஸ்ரோ தலைவர், மோடி விண்வெளி வீரர்களை சந்திப்பதற்கு முன்னர், அவர்களின் பெயர்களை நாட்டிற்கு தெரிவிப்பார் என்று தெரிவித்தார்.