தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேல்பவானியில் 19 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 17 செ.மீ., மற்றும் நீலகிரி நடுவட்டத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு
