சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 17ஆம் நாள் கம்போடியா சென்றடைந்து அந்நாட்டில் அதிகாரப்பூர்வமாக அரசு முறைப் பயணத்தைத் தொடங்கினார்.
புனோம்பென் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஷிச்சின்பிங்கைக் கம்போடியப் பேரரசர் சிஹமோனியும், மக்கள் கட்சி தலைவரும், செனெட் அவை தலைவருமான ஹுன்சென்னும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் எழுத்துப்பூர்வ உரை நிகழ்த்திய ஷிச்சின்பிங், கம்போடியா சீனாவின் அண்டை நாடுகளில் முக்கியமான வெளியுறவுத் திசையாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், நாம் கம்போடியாவுடன் இணைந்து, பிரதேசம் மற்றும் உலக அமைதிக்கும் நிதானத்துக்கும் பங்கு ஆற்ற விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.