20 நாடுகள் குழு தலைவர்களின் 20ஆவது உச்சிமாநாடு 23ஆம் நாள் தென்னாப்பிரிக்காவின் ஜொஹானஸ்பர்கில் நிறைவடைந்தது. ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம், மந்தமான உலகப் பொருளாதார மீட்சி, கருத்து வேற்றுமை முரண்பாடு மற்றும் நிர்வாக சிக்கல்களைச் சமாளிக்க வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் இதில் உரைநிகழ்த்திய போது வலியுறுத்தினார்.
மேலும், இவ்வுச்சிமாநாட்டின் முதல் நாளிலேயே கூட்டறிக்கை ஒன்று நிறைவேற்றப்படுவது ஜி20 உச்சிமாநாட்டின் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. பல்வேறு தரப்புகள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி பொது அறைக்கூவல்களைச் சமாளிக்கும் மனவுறுதியையும் இது வெளிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாட்டை நடத்தியது இதுவே முதன்முறையாகும். உலக ஆட்சி முறையின் சீர்திருத்தத்தை முன்னேற்றும் தெற்குலக நாடுகளின் கூட்டு விருப்பத்தை இது காட்டியுள்ளது.
உலக ஆட்சி முறையில் தெற்குலக நாடுகளின் பங்களிப்பு அதிகரிக்கும் நிலைமையில், ஜி20 புதிய வளர்ச்சி நிலையைப் படைத்து உலகப் பொருளாதார அதிகரிப்பைக் கூட்டாக முன்னேற்றுவது குறித்து சீனா பல பயனுள்ள நடவடிக்கைகளை முன்வைத்துள்ளது. எரியாற்றல், உணவு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தெற்குலகம் கவனம் செலுத்தும் அம்சங்கள் குறித்து சீனா குறிப்பிடத்தக்க வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
மேலும், உலக ஆட்சிமுறை முன்மொழிவின் நடைமுறையாக்கத்துடன், சீனா பிற தெற்குலக நாடுகளுடன் இணைந்து ஜி20 வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதார நிர்வாகத்துக்கு மேலதிக தெற்குலக சக்தியை வழங்கும்.
