நவீனமயமாக்கல் வழியில் இணைந்து முன்னேறி செல்லும் சீனா,ஆப்பிரக்கா

 

கடந்த பத்து ஆண்டுகளில், சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே ஒன்றுக்கொன்று நலன் பயக்கும் ஒத்துழைப்பு தரமான நிலையில் வளர்ந்து வருகின்றன. அத்துடன், சீனத் தொழில் நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியமைத்து, பசுமை எரியாற்றல் ஒத்துழைப்புத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளன. அதே வேளையில், ஆப்பிரிக்காவின் வெண்ணெய் பழம், எள்ளு, நிலக்கடலை உள்ளிட்ட வேளாண்மை பொருட்கள் சீன மக்களின் வாழ்க்கையில் சேர்ந்துள்ளன. அண்மையில், சி.ஜி.டி.என்.தொலைகாட்சி நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, சீனா பின்பற்றி வரும் ஆப்பிரிக்காவின் மீதான உண்மையான மற்றும் நேர்மையான ஒத்துழைப்புக்கு 86.3 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்தனர். புதிய காலத்தில் மேலும் நெருங்கிய சீனா-ஆப்பிரிக்கப் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2024ஆம் ஆண்டு உச்சி மாநாடு, இரு தரப்பும் இணைந்து நவீனமயமாக்கலை முன்னேற்றவும், உயர் நிலை சீன-ஆப்பிரிக்க பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கவும் புதிய வாய்ப்பை அளிக்கும். ஆப்பிரிக்க ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, நடப்பு உச்சி மாநாடு, சீனாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே தொடரவல்ல தன்மை, பரஸ்பர பலனடையும் ஒத்துழைப்புக்கான புதிய காலத்தை தொடங்கக் கூடும் என்று தெரிவித்தது.உலகளவில் மிகப்பெரிய வளரும் நாடான சீனா, அதிகமான வளரும் நாடுகளைக் கொண்ட கண்டணமான ஆப்பிரிக்கா ஆகியவை, உலகளாவிய மேலாண்மையை மேம்படுத்துவதற்கு முக்கிய ஆற்றலாக மாறியுள்ளன. பல முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகளில், கிட்டத்தட்ட ஒத்த கருத்துகள் கொண்டுள்ள இரு தரப்புகள், உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, காலனித்துவத்தால் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் மேலாதிக்கத் தன்மையுடைய செயல்களையும் எதிர்த்து வருகின்றன. மேலும், வளரும் நாடுகளின் கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மையை மேம்படுத்துமாறு இரு தரப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளன. சிக்கலான உலக சூழலில், சீனாவும் ஆப்பிரிக்காவும் இணைந்து செயல்பட்டால், வளரும் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை சிறப்பாகப் பாதுகாக்கவும் மேலும் நியாயமான சர்வதேச ஒழுங்கை மேம்படுத்தவும் துணைபுரியும்.

Please follow and like us:

You May Also Like

More From Author