மத்திய கிழக்கு மோதல் தொடர்பான அனைத்துத் தரப்புகளுடனும் தொடர்பைப் பராமரிக்கும் சீனா

மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் பதற்ற நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் 5ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மோதலில் நேரடியாக ஈடுபட்டுள்ள தரப்புகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் தரப்புகளுடனும் தொடர்புகளைப் பராமரித்து, இணக்க முயற்சியை வலுப்படுத்தி, ஒருமித்த கருத்தை உருவாக்கும் வகையில் சீனா தொடர்ந்து பாடுபடும் என்றார். அதோடு, பதற்ற நிலைமையை தணிக்க நேர்மறையான முயற்சிகளை மேற்கொள்வதற்காக, மத்திய கிழக்கு விவகாரத்துக்கான சீன அரசின் சிறப்புத் தூதரை சீனா விரைவில் அப்பிரதேசத்துக்கு அனுப்பும் என்றும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author