14ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் சீனக் கிராமப்புறத்தின் சாலைக்கான முதலீடு 2லட்சம் கோடி யுவான் ஆகும். கிராமப்புற பயணிகள் போக்குவரத்திற்கு 4445கோடி யுவான் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், கிராமப்புறச் சாலைப் பராமரிப்புக்கான ஒதுக்கீடு 40000கோடி யுவானைத் தாண்டியது.
14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் முதல் 4 ஆண்டுகளில், சீனாவின் கிராமப்புறங்களில் 7லட்சத்து 16ஆயிரம் கிலோமீட்டர் நீளமான சாலைகள் புதிதாகச் சீரமைக்கப்பட்டன. கிராமப்புறச் சாலைகளின் மொத்த நீளம் 4லட்சத்து 64ஆயிரம் கிலோமீட்டரை எட்டியது.
பெரிய கிராமங்களில் தார் அல்லது சிமண்ட் சாலைகளின் விகிதம் 94.6விழுக்காட்டை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.