அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய அரசியல் உதவியாளரான செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் நியமித்துள்ளார்.
தற்போது வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் அலுவலக இயக்குநராக செர்ஜியோ கோர் பணியாற்றி வருகிறார்.
அவரது நியமனம் உறுதி செய்யப்படும் வரை அவர் இந்தப் பதவியில் தொடர்வார்.
இதுகுறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், தனது அமெரிக்கா ஃபர்ஸ்ட் கொள்கையின் கீழ் கூட்டாட்சி அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் செர்ஜியோ கோர் மற்றும் அவரது குழு சுமார் 4,000 பணியாளர்களை சாதனை நேரத்தில் நியமித்துள்ளதாகப் பாராட்டினார்.
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்
