இஸ்ரேல் அமைச்சர்களுக்கு நெதர்லாந்து பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை ஊக்குவிப்பதாகக் கூறி இஸ்ரேல் தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இதமாா் பென் கிவிா், நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் நெதர்லாந்து வருவதற்கு அந்நாட்டு அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே இந்த இருவருக்கும் எதிராகப் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் கடந்த மாதம் பொருளாதாரத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.