சேலம் மாவட்டம் கொத்தாம்பாடியில் மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கொத்தாம்பாடியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் விழா கடந்த 26 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழாவில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஓம் சக்தி பராசக்தி எனும் கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.