இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
முதலில், கடந்த ஜூன் மாதம், ஒரு பங்கிற்கு ரூ.268 என்ற விலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77 சதவீத பங்குகளை அல்ட்ராடெக் நிறுவனம் வாங்கியது.
இந்நிலையில், தற்போது, ஒரு பங்கிற்கு ரூ. 390 என்ற விலையில், இந்தியா சிமெண்ட்ஸ் விளம்பரதாரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடமிருந்து கூடுதலாக 32.72 சதவீத பங்குகளை ரூ.3,954 கோடிக்கு வாங்க அல்ட்ராடெக் முடிவு செய்துள்ளது.
எனவே, இந்தியா சிமெண்ட்ஸின் 55.49 சதவீத உரிமை அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு செல்லவுள்ளது.