அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.
இதனால், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் இன்று காலை கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கிடையில், ஐந்தாவது சுற்று பேச்சு வார்த்தை விரைவில் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம், விவசாயிகளின் தலைவர்களிடம் ஏற்கனேவே 4 சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது.
4வது சுற்று பேச்சு வார்த்தையின் போது, பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை கொள்முதல் செய்ய அரசாங்கம் முன்மொழிந்தது.