பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்

நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலகத்திலிருந்து அதிகாரபூர்வமாக, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனவே, நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் போது, திருக்கோவிலூர் மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author