நாசா மையத்தில் வேலை செய்ய சீனர்களுக்கு தடை.!

Estimated read time 1 min read

அமெரிக்கா : விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வரும் நிலையில், நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்படுள்ளது. நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாசா (NASA) சமீபத்தில் சீன குடிமக்களுக்கு, அமெரிக்க விசாவுடன் இருந்தாலும், அதன் விண்வெளி திட்டங்களில் பங்கேற்க தடை விதித்துள்ளது. இந்த முடிவு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் விண்வெளிப் பந்தயத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் என பலர், நாசாவின் சில திட்டங்களில் பணியாற்றி வந்தனர். ஆனால், கடந்த செப்டம்பர் 5ம் தேதி முதல், சீன குடிமக்கள் நாசாவின் தரவு அமைப்புகளுக்கும், நேரடி மற்றும் மெய்நிகர் கூட்டங்களுக்கும் அணுகல் மறுக்கப்பட்டுள்ளது.

நாசாவின் செய்தித் தொடர்பாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ் இந்த முடிவு,பாதுகாப்பு காரணங்களுக்காக, சீன குடிமக்கள் நாசாவிற்குள் நேரடியாக நுழைவது, சைபர்நெடிக் வசதிகள், நெட்வொர்க் மற்றும் பொருள் அணுகல் ஆகியவற்றிலிருந்து நிறுவன ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விண்வெளி நிறுவனத்தின் உள் பாதுகாப்பு மற்றும் இங்கு செய்யப்படும் ஆராய்ச்சிப் பணிகளின் உணர்திறன் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவும் சீனாவும் விண்வெளியில் முன்னணியைப் பிடிக்க போட்டியிடுவதால், தொழில்நுட்பத் தகவல்கள் கசியாமல் பாதுகாக்க இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author